சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வந்த கோகுல்நாத் நடேசனும் அவர் மனைவி வினோதாவும் அதிலிருந்து விலகி இயற்கை விவசாயத்தில் இறங்கியுள்ளனர். சென்னை கொட்டிவாக்கத்தில் இரண்டரை ஏக்கரில் அமைந்திருக்கிறது இவர்களின் `கழனி நேட்டிவ் பார்ம்ஸ்' [ Kazhani Native farms ]. தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் விற்பனை மட்டுமல்லாது மற்ற இயற்கை விவசாயிகளின் பொருள்களை ஒருங்கிணைத்து மதிப்புக்கூட்டு பொருள்கள் செய்வது எனப் பல தளங்களில் பணியாற்றுகின்றனர். விவசாயத்தினை திறம்படச் செய்யும் இவர்கள் ஐடியில் மட்டுமல்ல விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும் என நிரூபித்துள்ளனர்.
Social Plugin